குளிக்க, பரிசல் சவாரி செய்ய தடையில்லை
குளிக்க, பரிசல் சவாரி செய்ய தடையில்லை | the flow of water in hogenakal cauvery river is 11,000 cubic feet காவிரி கரையோரங்களில் கன மழை பெய்து வருவதால் தமிழக எல்லையான பிலிக்குண்டுலுவில் நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 10000 கன அடியாக இருந்தது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 11 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்து அருவி, சீனி அருவி, மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. டூரிஸ்ட்டுகள் குளிக்க மற்றும் பரிசல் சவாரி செய்ய தடையில்லை என்பதால் டூரிஸ்ட்டுகள் அருவிகளில் உற்சாக குளியல் போட்டு குதுாகலித்தனர். பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
நவ 17, 2024