உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / கிராம மக்கள் ஆனந்த கண்ணீர் | Bus Service | The Villagers are Happy | Adukkam | Kodaikanal

கிராம மக்கள் ஆனந்த கண்ணீர் | Bus Service | The Villagers are Happy | Adukkam | Kodaikanal

கிராம மக்கள் ஆனந்த கண்ணீர் | Bus Service | The Villagers are Happy | Adukkam | Kodaikanal கொடைக்கானல் அடுத்துள்ள அடுக்கம் மலை கிராமத்தில் விவசாயமே முக்கிய தொழில். இங்கு இலகு ரக வாகனங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. அடுக்கத்தில் இருந்து விளை பொருட்களை 25 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கொடைக்கானலுக்கு இலகு ரக வாகனங்களில் கொண்டு செல்வதில் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. எனவே அடுக்கம் டு கொடைக்கானலுக்கு மினி பஸ் இயக்க வேண்டும் என கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை தேர்தல் அறிவிப்புக்கு முன்பே அரசு ஏற்றது. அதன் பகுதியாக அடுக்கம் டு கொடைக்கானல் வரை தினமும் 6 முறை மினி பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த மினி பஸ் கொடைக்கானல், வெள்ளி நீர்வீழ்ச்சி, பெருமாள்மலை, அடுக்கம் சென்று பின்னர் அடுக்கம், பெருமாள்மலை, வெள்ளி நீர்வீழ்ச்சி, கொடைக்கானல் திரும்பும் விதமாக மினி பஸ் சேவை இன்று முதல் இயக்கப்பட்டது. கட்டணம் நபருக்கு 30 ரூபாய். சுதந்திரத்திற்கு பின்னர் தங்கள் கிராமத்திற்கு மினி பஸ் சேவை கிடைத்ததால் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் சிந்தினர்.

ஏப் 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை