வன அதிகாரிகள் அமோக ஆதரவுடன் கொடைக்கானலில் வெட்டி கடத்தப்படும் அரிய வகை மரங்கள்
வன அதிகாரிகள் அமோக ஆதரவுடன் கொடைக்கானலில் வெட்டி கடத்தப்படும் அரிய வகை மரங்கள் / Forest Tree issue / Vilpatti / Kodaikanal கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சியில் அன்னை சத்யா காலனி, அட்டுவம்பட்டி கிரஷ் பகுதி மக்கள் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள குங்கிலிய மரங்களை அகற்ற வேண்டி மனு அளித்தனர். அதைத் தொடர்ந்து வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மரங்களை வனத்துறையினர் ஆய்வு செய்து 55 பட்டுப்போன மரங்களை அகற்ற அனுமதி வழங்கியது. இதுதான் சான்ஸ் என கருதிய மரக் கடத்தல் மாபியா கும்பல் 55 மரங்கள் உட்பட ஏராளமான அரிய வகை மரங்களை துரோடு வெட்டி லாரிகளில் ஏற்றி கடத்தியது. இதுகுறித்து கிராம மக்கள் வீடியோ ஆதாரங்களுடன் வனத்துறை அதிகாரிகளுக்கு புகார் அனுப்பினர். எனினும் நடவடிக்கை எடுக்கவில்லை மரக்கடத்தல் மாபியா கும்பல் வலையில் வனத்துறை அதிகாரிகள் சிலர் சிக்கி விட்டார்களோ என்ற சந்தேகம் எழுவதாக கிராம மக்கள் குற்றம் சுமத்தினர். கொடைக்கானல் மலை மரங்கள் இல்லாத மொட்டை மலையாக மாறுவதற்குள் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.