ஆயிரக்கணக்கில் அரிவாள் செலுத்தி பக்தர்கள் வழிபாடு | Dindigul | Karupana Swamy Temple
திண்டுக்கல் மாவட்டம் முத்துலாபுரம் ஆயிரம் அரிவாள் கோட்டை கருப்பண சுவாமி கோயிலில் தை திருவிழா கடந்த 3 ம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி சுவாமிக்கு கிடா வெட்டி, பொங்கல் வைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு நிகழ்வாக நேற்றிரவு பட்டு கட்டுதல் வெகுவிமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து பரம்பரை ஆசாரியர்கள் செய்த அரிவாளை மக்கள் காணிக்கையாக ஊர்வலமாக எடுத்து வந்து கருப்பணசாமிக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து பக்தர்கள் தங்களது நேர்த்திகடன் அரிவாளை பித்தளை மணிகளுடன் வேண்டுதலுக்கு ஏற்ப 2 அடி முதல் 15 அடி வரை காணிக்கை செலுத்தினர். ஆரம்பத்தில் நூற்றுக்கணக்கான அரிவாள் நேர்த்திகடன் செலுத்தி வந்த நிலையில் தற்போது ஆயிரக்கணக்கில் அரிவாள் காணிக்கை செலுத்தி வருகின்றனர். திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்கள் சேர்ந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.