தில் இருந்தா ஏறும்... ஏறிப் பாரும்...! | Kondarangi malai
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ளது கொண்டரங்கி மலை. 3825 அடி உயரம் கொண்ட செங்குத்தான மலை இது. ஒட்டன்சத்திரம் - பல்லடம் நான்கு வழிச்சாலையில் செல்லும்போது உயரமான மழை லிங்க வடிவில் கம்பீரமாக காட்சியளிக்கும். மலையை பார்த்ததும் தலை சுற்றும்; கால்கள் நடுங்கும்; உடலில் உதறல் ஏற்படும். இந்த மலையில் ஏறுவதா என மனம் பதபதைக்கும். சவால்கள் நிறைந்த கொண்டரங்கி மலையில் ஏறி மலை உச்சியில் இருக்கும் சிவபெருமானை பார்த்ததும் ஏறிய களைப்பு தீர்ந்து மன அமைதி பெறும் என்பது அனுபவ பூர்வ உண்மை. மதுரையை சேர்ந்த மகாத்மா யோகா இன்ஸ்டிடியூட் இயக்குனர் கங்காதரன் தலைமையில் சவால்கள் நிறைந்த கொண்டரங்கி மலையை உறுப்பினர்கள் ஏறி சிவனை வழிபட்டனர். வானத்தை தொடும் மலை உச்சியில் யோகா உறுப்பினர்கள் தியானம், பிரணாயாமம் செய்து புத்துணர்ச்சியுடன் சிவனருள் பெற்றனர்.