/ மாவட்ட செய்திகள்
/ திண்டுக்கல்
/ மலைக் கோயிலுக்கு ரோப்காரில் சென்ற அண்ணாமலை | Palani Temple Annamalai Darshan
மலைக் கோயிலுக்கு ரோப்காரில் சென்ற அண்ணாமலை | Palani Temple Annamalai Darshan
லோக்சபா தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் பாஜ தலைவர் அண்ணாமலை சூறாவளி பிரசாரம் செய்தார். தேர்தல் முடிந்த கையோடு கேரளாவில் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அதைத் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக கொடைக்கானலில் குடும்பத்துடன் ஓய்வெடுத்தார். இன்று காலை கொடைக்கானலில் இருந்து கோவை புறப்பட்ட அண்ணாமலை வழியில் பழநி தண்டாயுதபாணி கோயிலுக்கு குடும்பத்துடன் வருகை தந்தார். ரோப் காரில் மலைக் கோயிலுக்கு சென்ற அண்ணாமலை தரிசனம் செய்து விட்டு கோவைக்கு புறப்பட்டு சென்றார்.
ஏப் 29, 2024