உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / ₹ 1 கோடிக்கு பேரம் பேசி குற்றவாளிகளை மடக்கிய வனத்துறை | Three arrested for selling Ivory

₹ 1 கோடிக்கு பேரம் பேசி குற்றவாளிகளை மடக்கிய வனத்துறை | Three arrested for selling Ivory

₹ 1 கோடிக்கு பேரம் பேசி குற்றவாளிகளை மடக்கிய வனத்துறை | Three arrested for selling Ivory | Kodaikanal திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராமு, பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். கடந்த 2023 டிசம்பர் மாதம் பழநி மேற்கு தொடர்ச்சி மலையில் தேன் எடுக்கச் சென்றார். வனத்தில் ஆண் காட்டு யானை ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையிடம் ராமு தகவல் கூறாமல் மறைத்தார். தந்தங்களை வெட்டி எடுத்து வீட்டில் பதுக்கினார். தந்தங்களை விற்பது தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவரை அணுகினார். சோமசுந்தரம் மூலம் வயலூரை சேர்ந்த கணேசன் என்பவரின் நட்பு கிடைத்தது. மூவரும் சேர்ந்து கடந்த ஆறு மாதமாக தந்தங்களை விற்க முயன்றனர். இதுகுறித்து தமிழ்நாடு வன மற்றும் வன உயிரினங்கள் குற்றத் தடுப்பு தனிபிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தனிப்பிரிவினர் கணேசன் மற்றும் சோமசுந்தரத்தை தொடர்பு கொண்டு யானை தந்தம் வாங்குபவர்கள் போல நடித்து பேரம் பேசினர். அப்போது ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் இரண்டு தந்துங்களை தருவதாக சோமசுந்தரம் மற்றும் கணேசன் கூறினர். இதற்கு தனிப்பிரிவினர் ஒப்புக் கொண்டனர். ஒரு கோடி ரூபாயுடன் கன்னிவாடி வருவதாக சோமசுந்தரத்திடம் கூறினர். இதையடுத்து கொடைக்கானல் மாவட்ட உதவி வன அலுவலர்கள் சக்திவேல் மற்றும் நர்மதா ஆலோசனையின் பேரில் வனத்துறையினர் யானை தந்தத்துடன் கன்னிவாடிக்கு சென்றனர். அங்கு தந்தங்களுடன் தயாராக இருந்த கணேசன் மற்றும் சோமசுந்தரத்தை தனிப்பிரிவினர் சுற்றி வளைத்து தந்தங்களை பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்தனர். வனத்துறையினர் நடத்திய விசாரணையில் யானை தந்தம் பழநி வனப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது எனவும், பண்ணைக்காடு பகுதியைச் சேர்ந்த ராமு யானை தந்தத்தை எடுத்து வந்து விற்பனை செய்ய முயன்றது உறுதியானது. ராமுவை கைது செய்து யானை தந்தம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை அறிய ராமுவை பழநி மேற்கு தொடர்ச்சி மலைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அடர்ந்த வனப்பகுதிக்குள் யானை இறந்து கிடந்ததற்கான தடயங்களும் எலும்புக்கூடுகளும் கிடந்தன. ராமு கூறியது உண்மை என்பதை உறுதிபடுத்தினர். அவர்களிடம் இருந்து டூவீலர்கள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். யானை தந்தம் கடத்தல் தொடர்பாக விசாரணை நடக்கிறது.

ஜூன் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை