உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / மாந்தோப்பில் புகுந்து தொல்லை கொடுத்த குரங்கிற்கு நேர்ந்த துயரம்

மாந்தோப்பில் புகுந்து தொல்லை கொடுத்த குரங்கிற்கு நேர்ந்த துயரம்

மாந்தோப்பில் புகுந்து தொல்லை கொடுத்த குரங்கிற்கு நேர்ந்த துயரம் / two arrested for killing and eating a monkey / dindigul திண்டுக்கல் வீர சின்னம்பட்டியை சேர்ந்த கேட்டரிங் மாஸ்டர் ராஜாராம். இவரது மாந்தோப்பு வீர சின்னம்பட்டியில் உள்ளது. இங்கு சில நாட்களாக குரங்குகள் புகுந்து மாங்காய்களை பறித்து நாசம் செய்தன. இதனால் ராஜாராம் தவசிமடை வடுகப்பட்டியைச் சேர்ந்த தேங்காய் வெட்டும் தொழிலாளி ஜெயமணியை சந்தித்து குரங்குகளை கொல்ல வேண்டும் என கூறினார். ஜெயமணி வனவிலங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிடும் பழக்கம் உடையவராக இருந்தார். குரங்கை கொல்ல ராஜாராமிடம் 1000 ரூபாய் ஜெயமணி வாங்கினார். தன்னிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து கொண்டு ராஜாராம் மாந்தோப்பிற்குச் சென்றார். அங்கு சுற்றித்திரிந்த குரங்கை துப்பாக்கியால் சுட்டு கொன்றார். குரங்கின் உடலை வீட்டிற்கு எடுத்து வந்து தோலை உரித்து கறியை சமைத்து சாப்பிட்டார். குரங்கின் தோலை தவசிமடை பகுதியில் புதைத்தார். இதையறிந்த சிறுமலை ரேஞ்சர் மதிவாணன், வானவர் அப்துல் ரகுமான் தலைமையிலான குழுவினர் ஜெமணி மற்றும் ராஜாராமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து குரங்கு தோல், நாட்டு துப்பாக்கி, வெடி மருந்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர். குரங்கை கொன்று சமைத்து ருசித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மார் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை