உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ஈரோடு / குட்டி யானையை 5 அடி குழி்க்குள் வைத்து பாதுகாக்கும் வனத்துறை | Coimbatore | An elephant fighting

குட்டி யானையை 5 அடி குழி்க்குள் வைத்து பாதுகாக்கும் வனத்துறை | Coimbatore | An elephant fighting

குட்டி யானையை 5 அடி குழி்க்குள் வைத்து பாதுகாக்கும் வனத்துறை |Coimbatore | An elephant fighting for its life ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி கோயில் அருகே குட்டியுடன் வந்த தாய் யானை மயங்கி விழுந்தது. தாய் யானையை சுற்றி சுற்றி வந்த குட்டியானை சப்தமிட்டதால் பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சத்தியமங்கலம் வனத்துறையினர், கால்நடை டாக்டர் சதாசிவம் குழுவினர் தாய் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 40 வயது மதிக்கத்தக்க தாய் யானைக்கு குளுக்கோஸ், தண்ணீர், இலைகளை வனத்துறையினர் அளித்தனர். யானையால் எழ முடியாமல் உயிருக்கு போராடுகிறது. குட்டி யானையை ஐந்து அடி குழியில் வைத்து அதற்கு பால், குடிநீர் மற்றும் உணவு கொடுத்து பாதுகாத்து வருகின்றனர். வனப்பகுதியில் இருந்து 2 காட்டு யானைகள் இந்த யானையை சுற்றி சுற்றி வந்து சத்தமிட்டு வருவதால் வனத்துறையினர் பட்டாசு வெடித்து துரத்தினர்.

மார் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ