வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பாதிரியாரிடம் அசிங்கபட்ட ஜோசப்
தவெக மாவட்ட செயலாளர்களுடன் விஜய் முக்கிய ஆலோசனை | Panayur | Vijay meet |District Secretaries
தவெக மாவட்ட செயலாளர்களுடன் விஜய் முக்கிய ஆலோசனை | Panayur | Vijay meet |District Secretaries சென்னை பனையூரில் உள்ள தவெக கட்சித் தலைமை அலுவலகத்தில், விடுபட்ட மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிகாலை முதலே தலைமை அலுவலகத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று, புதிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் வருகை மற்றும் நிர்வாகிகள் சத்திப்பு காரணமாக, அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக பெண் பவுன்சர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கட்சி அலுவலகத்தின் நுழைவாயில், உட்புற பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பாதிரியாரிடம் அசிங்கபட்ட ஜோசப்