தொடக்கப் பள்ளியில் படிப்பை தொடர்ந்து விஞ்ஞானியாக உயர்ந்தவர் | Kanyakumari |ISRO chief V.Narayanan
தொடக்கப் பள்ளியில் படிப்பை தொடர்ந்து விஞ்ஞானியாக உயர்ந்தவர் |Kanyakumari | ISRO chief V. Narayanan selection இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், இஸ்ரோவின் தலைவராக தற்போது சோம்நாத் உள்ளார். இவரது பதவிக்காலம் ஜனவரி 13ம் தேதியுடன் முடிவடைகிறது. அவரைத் தொடர்ந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் புதிய தலைவராகவும், விண்வெளித் துறையின் செயலாளராகவும் வி.நாராயணனை மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு அறிவித்துள்ளது. தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மேலக்காட்டு விளையை நாராயணன். இஸ்ரோவில் கடந்த 1984 ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்த நாராயணன் இதுவரை ஏஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி எனப் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போது திருவனந்தபுரத்தில் வலியமலாவில் உள்ள லிக்விட் புரபொல்ஷன் சிஸ்டம்ஸ் செண்டர் என்னும் எல்.பி.,எஸ்.சியின் இயக்குனரக பணியற்றி வருகிறார். இவர் இஸ்ரோ தலைவராக ஜனவரி 14ம் தேதி இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்கிறார். 2 ஆண்டுகள் அல்லது மறு அறிவிப்பு வரும் வரை வி.நாராயணன் இஸ்ரோ தலைவராக, இந்திய விண்வெளித் துறை செயலராக செயல்படுவார். இவர் காட்டுவிளை அரசு தொடக்கப்பள்ளியில் படிப்பை தொடங்கினார். உயர்நிலை படிப்பு சியோன்புரம் சிஎஸ்ஐ பள்ளியிலும், நாகர்கோவில் கோணம் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் டிப்ளமோ முடித்து பின்னர் கோராக்பூர் ஐஐடியில் பட்டப் படிப்பை முடித்தவர். இஸ்ரோ தலைராக நாராயணன் தேர்வு செய்யப்பட்டதற்கு குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழக மக்களை மகிழ்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு கவிதாராஜ் என்ற மனைவியும், அனுபமா என்ற மகளும், கலேஷ் என்ற மகனும் உள்ளனர்