உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கன்னியாகுமரி / ஓடி வரும் பெண் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு | Kanyakumari | Pilgrimage to Maha Shivalaya

ஓடி வரும் பெண் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு | Kanyakumari | Pilgrimage to Maha Shivalaya

ஓடி வரும் பெண் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு / Kanyakumari / Pilgrimage to Maha Shivalaya மகா சிவராத்திரியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் மகா சிவாலய புனித யாத்திரை நேற்று துவங்கி குமரியில் நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளாக திருமலை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிபாகம், மேலாங்கோடு உள்பட 12 கோயில்களிலும் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர் குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கபட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர் காவல்படையினர் பாது காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓடி வரும் பெண் பக்தர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. நாளை அதிகாலை வரை பக்தர்கள் கூட்டம் இருக்கும். வழி நெடுகிலும் ஹிந்து அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மோர், சுக்கு நீர், அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

பிப் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை