குமரி மாவட்டம் தேவிகோடு பகுதியில் பதட்டம் | Kanyakumari | RSS executive father attacked
குமரி மாவட்டம் தேவிகோடு பகுதியில் பதட்டம் / Kanyakumari / RSS executive father attacked கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லையான தேவிகோடு பகுதியில் ஆர்எஸ்எஸ் மண்டல பொறுப்பாளர் அபிஜித் வீடு உள்ளது. அதே பகுதியை சேர்ந்த சைஜீ என்பவர் அபிஜித் வீட்டின் அருகே மது போதையில் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். அப்பகுதி மக்கள் தமிழக போலீசில் புகார் கூறினர். போலீசார் கண்டுகொள்ளவில்லை. அரிவாளை காட்டி சாலையில் செல்வோரிடம் சைஜீ தகராறு செய்தார். வீட்டின் அருகே நின்றிருந்த அபிஜித் தந்தை ஸ்ரீகுமார் தலையில் சைஜீ வெட்டி விட்டு தப்பியோடினார். படுகாயமடைந்த ஸ்ரீகுமாரை குழித்துறை அரசு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தனர். சம்பவம் நடந்து பல மணி நேரம் கழிதது பளுகல் போலீசார் வந்தனர். விசாரணை நடக்கிறது. ஆர்எஸ்எஸ் நிர்வாகி தந்தையை அரிவாளால் தாக்கிய சம்பவம் தேவிகோடு பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது.