/ மாவட்ட செய்திகள்
/ கரூர்
/ கரூர் பெண் அதிகாரி ஷாக் | cyber frauds using fake social media accounts
கரூர் பெண் அதிகாரி ஷாக் | cyber frauds using fake social media accounts
கரூர் மாநகராட்சி சுகாதார அதிகாரியாக பணியாற்றி வருபவர் லட்சிய வர்ணா. இவரது பெயரில் மர்ம ஆசாமி ஒருவர் வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் வலைதளத்தில் போலி கணக்குகளை உருவாக்கினார். தனது வங்கிக் கணக்கில் தினசரி அதிகபட்ச பணப் பரிவர்த்தனை எல்லையை கடந்து விட்டதால் அவசர உதவிக்காக பணம் அனுப்புமாறு நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். சந்தேகத்தின் பேரில் நண்பர்கள் சிலர் லட்சிய வர்ணாவை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது அவை போலி கணக்குகள் என தெரியவந்தது. இது தொடர்பாக லட்சிய வர்ணா கரூர் சைபர் கிரைம் போலீசில் புகார் கூறினார். விசாரணை நடக்கிறது.
செப் 06, 2024