கமிஷன் தகராறில் கோஷ்டி சண்டை | Karur | DMK Councilar fight
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பள்ளப்பட்டி நகராட்சியில் திமுகவைச் சார்ந்த 22 கவுன்சிலர்கள் 5 சுயேச்சை கவுன்சிலர்கள் என 27 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் தலைவர் துறை தலைமையில் ஒரு கோஷ்டியாகும் துணை தலைவர் ஜான் தலைமையில் ஒரு கோஷ்டியாகவும் செயல்படுகின்றனர். இந்நிலையில், பள்ளப்பட்டியில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. தலைவர் கோஷ்டியினர் துணைத் தலைவர் கோஷ்டிக்கு டெண்டரில் கமிஷன் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், கூட்டம் முடிந்ததும் துணைத் தலைவர் கோஷ்டியைச் சேர்ந்த 3-வது வார்டு கவுன்சிலர் நத்தம் ஜாபர், 9-வது வார்டு கவுன்சிலர் சாதிக் தலைவரை சந்தித்தது தங்களது வார்டில் அடிப்படை வசதி உள்ளிட்டவை செய்து தரப்படவில்லை இதனால் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர் எனவே தங்களது வார்டுக்கு பணிகள் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என பேசினார் இதில் தலைவருக்கும் சாதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் திமுக கவுன்சிலர்கள் சிலர் நகராட்சி அலுவலகம் முன்பு கவுன்சிலர்கள் ஜாபர், சாதிக் ஆகியோர் ஆபாச வார்த்தைகளால் திட்டிவேட்டியை தூக்கி ஆபாச செய்கையில் ஈடுபட்டனர்.இதனை சிலர் வீடியோ எடுத்து வெளியிட்டனர்.