உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கரூர் / 2 கி.மீ தூரம் கம்பத்தை ஊர்வலமாக தோளில் சுமந்த பக்தர்கள் | Karur | Mariamman kovil |Vaikasi festival

2 கி.மீ தூரம் கம்பத்தை ஊர்வலமாக தோளில் சுமந்த பக்தர்கள் | Karur | Mariamman kovil |Vaikasi festival

கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் வைகாசி பெருவிழா இன்று கோலாகலமாக துவங்கியது. இவ்விழா ஜூன் 29 ம் தேதி வரை 19 நாட்கள் நடக்கிறது. 3 கொப்புகள் கொண்ட வேப்பமரம் பரம்பரை மூப்பன்களால் வெட்டி எடுக்கப்பட்டு பாலாம்மாள்புரம் விநாயகர் கோயிலுக்கு கொண்டு வந்தனர். கம்பத்திற்கு வேப்பிலை சுற்றி, தண்ணீர், பால் ஊற்றி, மஞ்சள், குங்குமம் இட்டு வழிபட்டனர். கம்பத்திற்கு முன்பாக இளைஞர்கள், இளம்பெண்கள் உற்சாக நடனமாடினர். ஜவஹர் பஜார், கடைவீதி வழியாக கோயிலுக்கு கம்பம் ஊர்வலமாக எடுத்து சென்றனர். வழி நெடுகிலும் பக்தர்கள் காத்திருந்த கம்பத்தை வழிபட்டனர். மாரியம்மன் கோயில் பரம்பரை அறங்காவலரிடம் கம்பம் ஒப்படைக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்தை தரிசித்தனர். தொடர்ந்து கோயிலில் இருந்து கம்பம் அமராவதி ஆற்றிற்கு எடுத்து சென்று சிறப்பு பூஜைகள் செய்து மீண்டும் கோயிலுக்கு எடுத்து வந்து வழிபட்டனர்.

மே 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ