கலெக்டர் சரயு கோட்டை விட்ட ஆய்வு Krishnagiri New building damage
கிருஷ்ணகிரி மாவட்டம் பெரிய தள்ளப்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளியில், 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய கட்டடம் கட்டப்பட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன் திறந்து வைக்கப்பட்டது. புதிய கட்டட வகுப்பறையில் மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தனர். காலை 9 மணியளவில் பிளஸ் 1 மாணவர்கள் வகுப்பறையில் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. அதில் மாணவர்கள் சந்தோஷ், வெங்கடேஷ், மணிகண்டன் படுகாயம் அடைந்தனர்.
ஆக 27, 2024