உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கிருஷ்ணகிரி / வாழ்வாதாரத்திற்கு எந்த அடிப்படை வசதியும் மாநில அரசு செய்யவில்லை என குற்றச்சாட்டு

வாழ்வாதாரத்திற்கு எந்த அடிப்படை வசதியும் மாநில அரசு செய்யவில்லை என குற்றச்சாட்டு

வாழ்வாதாரத்திற்கு எந்த அடிப்படை வசதியும் மாநில அரசு செய்யவில்லை என குற்றச்சாட்டு| Tribal people demand basic livelihood facilities| Krishnagiri கிருஷ்ணகிரி முதுகேரிதொட்டி மலை கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். சுதந்திரம் அடைந்தது முதல் இன்று வரை இந்த மலை கிராமத்திற்கு எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. இந்த பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் பல கிலோமீட்டர் நடந்து சென்று கல்வி கற்பதால் படிப்பை பாதியில் விடும் அவலம் உள்ளது. மருத்துவ வசதிகள் இல்லாததால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கரடு முரடான சாலையில் வனவிலங்கு நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். பி.டி.ஓ. ஆபீஸ், தாசில்தார் , கலெக்டரிடம் பல முறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக அரசு உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்தனர்

மார் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி