உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / நிலையான வளர்ச்சி இலக்குகள் விழிப்புணர்வு கருத்தரங்கு

நிலையான வளர்ச்சி இலக்குகள் விழிப்புணர்வு கருத்தரங்கு

மதுரை அனுப்பானடி வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் நிலையான வளர்ச்சி இலக்குகள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. பள்ளி முதல்வர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். நிலையான வளர்ச்சி இலக்குகள் பற்றி மதுரை அமெரிக்கன் கல்லூரி விலங்கியல் துறை உதவிப் பேராசிரியர் ராஜேஷ் மாணவர்களிடம் கலந்துரையாடினார். அவர் பேசுகையில், ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகள் என்பது 169 இலக்குகளைக் கொண்டதாகும். இவற்றை ஐக்கிய நாடுகள் சபையின் 191 உறுப்பு நாடுகளும் 2030 ம் ஆண்டிற்குள் அடைய முயற்சி செய்ய ஒப்புக்கொண்டுள்ளன. சுகாதாரம், கல்வி மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் இலக்குகள் கவனம் செலுத்துகின்றன, காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கும் கடல்களைப் பாதுகாப்பதற்கும் உதவுவதில் அதிக கவனம் செலுத்துகிறது என்றார். மேலும் மாணவர்களின் சந்தேகங்களுக்கு உதவிப் பேராசிரியர் ராஜேஷ் விளக்கமளித்தார். கருத்தரங்கில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு நிலையான வளர்ச்சி இலக்குகள் பற்றி உறுதிமொழி ஏற்றனர்.

செப் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை