உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / 25 ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைப்பு | Sabarimala | Ayyappa Temple Opening

25 ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைப்பு | Sabarimala | Ayyappa Temple Opening

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலையில் நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி தீபம் ஏற்றியதும் பக்தர்கள் 18 படிகள் வழியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு திருநீறு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் மேல் சாந்தி கோயில் முன்புறமுள்ள ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்த்தார். இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. அதிகாலை 5 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி கண்டரரு ராஜீவரரு ஐயப்பன் விக்கிரகத்தில் அபிஷேகம் நடத்தி நெய் அபிஷேகத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கணபதி கோபம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. காலை 7.30 க்கு உஷ பூஜை நடைபெற்றது. வரும் 22ம்தேதி வரை நடை திறந்திருக்கும். ஐப்பசி மாத பூஜைகள் முடிவடைந்து வரும் 25 இரவு 10 க்கு நடை அடைக்கப்படும்.

அக் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை