மதுரை சின்மயா மிஷன் கீதா பாராயணம் போட்டியில் ருசிகர சம்பவம்
மதுரை சின்மயா மிஷன் கீதா பாராயணம் போட்டியில் ருசிகர சம்பவம் | Bhagavad Gita Recitation | State Level Competition | Chinmaya Mission | Prize Distribution Function | Aakash Club | Madurai சின்மயா மிஷன் சார்பில் மாநில அளவிலான கீதா பாராயணம் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா 2025 மதுரை பரவையில் உள்ள ஆகாஷ் கிளப் வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 17 சின்மயா மிஷன் மையங்கள் சார்ந்த மாணவ, மாணவிகள் உற்சாகமாக பங்கேற்றனர். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 306 மாணவ, மாணவிகள் மாநில இறுதிப் போட்டியில் கலந்து கொண்டனர். இவர்களில் மூவர் மாநில அளவிலான வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இப்போட்டி LKG முதல் ப்ளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு A, B, C, D, E மற்றும் F என ஆறு பிரிவுகளாக நடத்தப்பட்டது. மாணவர்களின் மேலான ஆர்வம் மற்றும் பக்தியை பாராட்டும் விதமாக Exemplary, Meritorious, Outstanding, Special Jury எனும் பிரிவுகளின் கீழ் அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவிற்கு முதன்மை விருந்தினராக TAG Group of Industries நிர்வாக இயக்குனர் ரகுராம் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார். சின்மயா மிஷன் டிரஸ்ட்டி ராமச்சந்திரன் வரவேற்றார். சின்மயா மிஷன் ஜிடேஷ் சைதன்யா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு பிராந்தியத் தலைவர் ஸ்வாமி ஸ்ரீதரானந்தா ஆசி உரையாற்றினார். தொடர்ந்து கலாசார நிகழ்ச்சிகள், பெற்றோர்களுக்கான வினாடி வினா மற்றும் தோல் பாவை கூத்து போன்ற கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின. மதிய நேரத்தில் நடைபெற்ற நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்வில் சின்மயா மிஷன் டிரஸ்ட்டி ஜயப்ரதீப் ஜியோதிஸ் வரவேற்று பேசினார். சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்த பகவத் கீதையின் 15ம் அத்தியாயம் குறித்து ஆன்மிக விளக்க உரையாற்றினார். இந்நிகழ்விற்கு தினமலர் இணை இயக்குனர் மற்றும் தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குனர் ஆர்.லட்சுமிபதி தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கி பேசினார். தொடர்ந்து சின்மயா மிஷன் ஸ்வாமி சிவயோகானந்தா பகவத் கீதையின் 15ம் அத்தியாயம் குறித்து ஆன்மிக விளக்க உரையாற்றினார். சின்மியா மிஷன் டிரஸ்ட்டி திலகர், தலைவர் திருமலையப்பன், தெற்கு மண்டல கீதா பாராயணப் போட்டி ஒருங்கிணைப்பாளர் ஹரி ஷ்யாம் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா நிறைவில் மாநில அளவிலான கீதா பாராயணம் போட்டியின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர். வித்யா விஜய் நன்றி கூறினார். ஏற்பாடுகளை சின்மயா மிஷன் மதுரை நிர்வாகக்குழு உறுப்பினர்கள், தேவி குழு உறுப்பினர்கள் மற்றும் சின்மயா யுவகேந்திரா உறுப்பினர்கள் பக்தி, அர்ப்பணிப்போடு சிறப்பாக செய்தனர்.