அப்போலோ ப்ரெஸ்ட் கிளினிக் திறப்பு தென் தமிழகத்தின் முதல் மையம்
மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனை சார்பில் தென் தமிழகத்திலேயே முதன் முறையாக பெண்களுக்கு விரிவான மார்பக நல சிகிச்சையை வழங்குவதற்காக பிரத்யேகமாக அப்போலோ பிரெஸ்ட் கிளினிக் மையம் துவக்கப்பட்டது. இதன் மூலம் பெண்களின் மார்பகம் குறித்த ஆரோக்கியம் மற்றும் பிரச்சனைகளை கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை பெறும் வகையில் இம்மையம் செயல்படும். இம்மையத்தை கலெக்டர் சங்கீதா துவக்கி வைத்தார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கார்த்திகா, மகாத்மா கல்வி குழுமம் தலைவர் பிரேமலதா, மகளிர் தொழில்முனைவோர் அமைப்பின் தலைவர் ராஜகுமாரி ஜீவகன், லேடி டோக் கல்லூரி முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ மற்றும் சீதாலட்சுமி கல்வி குழுமத்தின் தாளாளர் பூர்ணிமா வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இம்மையம் புற்றுநோய் மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர்கள், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள், கதிரியக்கம் மற்றும் நோயியல் நிபுணர்கள் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்களை கொண்ட குழுவாக செயல்படும்.