மதுரை ராஜாஜி அரசு ஹாஸ்பிடல் எலும்பு முறிவு பிரிவு சாதனை
மதுரை ராஜாஜி அரசு ஹாஸ்பிடல் எலும்பு முறிவு பிரிவு சாதனை / People to come forward to donate bones / Rajaji Government Hospital / Bone Bank / Madurai தென் தமிழகத்தில் முதன்முறையாக சென்னைக்கு அடுத்து, மதுரையில் எலும்பு வங்கி உள்ளது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் எலும்புமுறிவு பிரிவு கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் துவக்கப்பட்டது. இந்த எலும்பு வங்கி பிரிவில் சர்ஜரி செய்யும் டாக்டர்களுக்கு தேர்ச்சி பெற்ற ஊழியர்கள் எலும்பு மாற்று அறுவை சிகிச்சையில் பக்க பலமாக உள்ளனர். தானமாக பெறப்படும் மனித எலும்புகளை எடுத்து சுத்தம் செய்து 30 நாட்களுக்கு 80 டிகிரி செல்சியசில் டீப் ஃப்ரீசிங் (Deep Freezing) செய்யப்படுகிறது. பின்னர் பெங்களுருவில் உள்ள நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு காமர் கதிரியக்கம் மூலம் கிருமி நீக்கம் செய்து மீண்டும் எலும்பு வங்கியில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. சேகரிக்கப்பட்ட இந்த எலும்புகளானது 5 வருடம் வரை மட்டுமே எலும்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்த முடியும் என டாக்டர்கள் கூறினர். இந்த எலும்புகளை புற்றுநோயாளிகள், விபத்தில் அடிபட்டவர்களுக்கு பொருத்தப்படுகிறது. லைவ் டோனர் முறையில் 2022 முதல் தற்போது வரை 168 பேருக்கு பந்து மூட்டு அகற்றப்பட்டு பிற நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இறந்தவர் மூலம் டோனர்கள் கிடைப்பது குறைவு. இறந்த பின்பு அந்த எலும்புகளை எடுக்கும்போது உடலின் தன்மை உலண்டு போகும் என நினைத்து இறந்தவரின் உறவினர்கள் எலும்புகளை தர மறுப்பர். ஆனால் விபத்துக்களில் இறந்தவர் உடலில் இருந்து எலும்பை எடுத்த பின்னர் தேவையான எலும்பு மாதிரியை வைத்து தைத்து அனுப்புகின்றனர். மூளைச்சாவு நோயாளியிடம் இருந்து கை, கால், தொடை எலும்புகளை தானமாக பெறலாம் என்றாலும் விழிப்புணர்வு இல்லாமல் 2022 முதல் தற்போது வரை 12 பேரிடம் மட்டுமே எலும்புகள் பெறப்பட்டுள்ளது. லைவ் டோனர்களைக் காட்டிலும், மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து குறைவாகவே எலும்பு தானம் பெறுவதாக தெரிவித்தனர். விபத்தில் நோயாளிகளின் எலும்புகள் நொறுங்கினால் அவர்களிடம் இருந்தே சிறிதளவு எலும்புகளை எடுத்து ஆட்டோகிராப்ட் அறுவை சிகிச்சை செய்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எலும்புகள் அரிக்கப்பட்ட நிலையில் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ரத்த தானத்தைப் போல எலும்பு தானத்திற்கான தேவையும் அதிகரித்து வருகிறது. மற்ற உடல் உறுப்புகளைப் போலவே எலும்புகளும் மற்றவர்களை வாழ வைக்கிறது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றனர்.