உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / தாதன்குளம் விநாயகர் கோயிலில் புகுந்து விஷமிகள் அட்டகாசம் | Damage to temple items

தாதன்குளம் விநாயகர் கோயிலில் புகுந்து விஷமிகள் அட்டகாசம் | Damage to temple items

விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை திருச்சுழி ரோட்டில் இந்து அறநிலைத்துறைக்கு பாத்தியப்பட்ட தாதன்குளம் விநாயகர் கோயில் உள்ளது. நுாற்றாண்டு பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கும்பாபிஷேகம் செய்ய கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்றன. பணிகள் முழுமை பெறவில்லை. எனினும் வரும் 22ம் தேதி கும்பாபிஷேகம் செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இதற்கு ஆன்மிக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் கோயில் நிர்வாகம் கும்பாபிஷேக பணிகளை தொடர்ந்து செய்து வந்த நிலையில் ஞாயிறு இரவு கும்பாபிஷேக யாகசாலையை விஷமிகள் இடித்து சேதப்படுத்தினர். பக்தர்கள் மற்றும் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோயில் நிர்வாகம் போலீசில் புகார் கூறியது. அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

பிப் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை