தினமலர் லட்சிய ஆசிரியர் விருது - 2024 வழங்கி மதுரை மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் பேச்சு | Dinamala
சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நல்லாசிரியர் விருது போல் ஒவ்வொரு ஆண்டும் அர்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்களை கண்டறிந்து தினமலர் நாளிதழ் சார்பில் லட்சிய ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்தாண்டும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பித்தனர். அவர்களில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த 30 ஆசிரியர்களை நமது லட்சிய ஆசிரியர் தேர்வுக்குழு தேர்வு செய்தது. இதற்கான விருது வழங்கும் விழா மதுரை தினமலர் அலுவலகத்தில் நடைபெற்றது. தினமலர் பொது மேலாளர் பாலமுருகன் தலைமை வகித்தார். செய்தி ஆசிரியர் ரமேஷ்குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் ஆசிரியர்களுக்கு தினமலர் லட்சிய ஆசிரியர் விருது - 2024 வழங்கி கவுரவித்தார்.