திமுக பிரமுகர் எஸ்கேப் | Hoarding Of Liquor | DMK Leader Absconds | Melur | Manamadurai | Madurai
திமுக பிரமுகர் எஸ்கேப் | Hoarding Of Liquor | DMK Leader Absconds | Melur | Manamadurai | Madurai தமிழக சட்டசபை தேர்தலையொட்டி கடந்த 21 முதல் 23 வரை டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. முன்னேற்பாடாக சரக்குகளை வாங்கி பெட்டிக்கடைகள், வீடுகளில் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்க திமுகவினர் சிலர் திட்டமிட்டிருந்தனர். அதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சீனியப்பா நகரில் திமுக பிரமுகர் சடையப்பன் தனது வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஸ்பாட்டுக்கு விரைந்த போலீசார் சடையப்பன் வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தினர். வீட்டிற்குள் சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 1400 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய சடையப்பன் மற்றும் கூட்டாளிகளை தேடுகின்றனர். breath: மேலுார்: பெட்டிக்கடையில் மது குவியல் 3,000 மது பாட்டில்கள் பறிமுதல் மதுரை மாவட்டம் மேலுார் அடுத்த தும்பைபட்டியில் உள்ள பெட்டிக்கடையில் போலீசார் ரெய்டு நடத்தினர். அங்கு மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2928 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மணப்பட்டியை சேர்ந்த சரணவன் கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் தேர்தலையொட்டி டாஸ்மாக் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதைப்பயன்படுத்தி மது பாட்டில்களை மொத்தமாக கொள்முதல் செய்து பதுக்கி கூடுதல் விலைக்கு விற்க திமுகவினர் சிலர் திட்டமிட்டது தெரியவந்தது.