முதல்வர் விஜய் உத்தரவிட்டும் அதிகாரிகள் மவுனம் ஏன்
முதல்வர் விஜய் உத்தரவிட்டும் அதிகாரிகள் மவுனம் ஏன் | Public blockades road demanding removal of TASMAC | Mahatma Gandhi Nagar Bus Stop | Madurai தமிழக முதல்வர் விஜய் உத்தரவுப்படி பஸ் ஸ்டாண்ட், கோயில், பள்ளிகள் அருகே செயல்பட்டு வந்த 717 மதுபான கடைகளை அகற்றப்பட்டன. மதுரை கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட மகாத்மா காந்தி நகர் பஸ் ஸ்டாப் அருகே கிருஷ்ணா நதி தெருவில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ள நிலையில் இங்கு உள்ள மதுபான கடையில் மது வாங்க வரும் குடிமகன்கள் குடித்துவிட்டு தகராறு செய்வதால் மக்கள், மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பல முறை புகார் கூறியும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து மதுபான கடையை உடனே அகற்றக்கோரி குடியிருப்புவாசிகள் மகாத்மா காந்தி நகர் பஸ் ஸ்டாப் அருகே இன்று காலை மறியலில் ஈடுபட்டனர். Bytes: வனிதா மகாத்மா காந்தி நகர், மதுரை 03:27 - 03:50 பானு மகாத்மா காந்தி நகர், மதுரை 03:55 - 04:20 ஸ்பாட்டுக்கு வந்த கூடல் புதூர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். டாஸ்மாக் கடை உடனே அகற்றப்படும் என உறுதியளித்ததால் மறியலை கைவிட்டனர்.