உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / அனல் பறக்கப் போகும் மதுரை ஜல்லிக்கட்டு! கெத்து காட்ட வீரர்கள்; குத்து விட காளைகள் ரெடி | Jallikattu

அனல் பறக்கப் போகும் மதுரை ஜல்லிக்கட்டு! கெத்து காட்ட வீரர்கள்; குத்து விட காளைகள் ரெடி | Jallikattu

* அனல் பறக்கப் போகும் மதுரை ஜல்லிக்கட்டு! கெத்து காட்ட வீரர்கள்; குத்து விட காளைகள் ரெடி | Jallikattu | Madurai பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல இடங்களில் ஜல்லிகட்டு போட்டி நடந்தாலும், மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தான் உலக அளவில் பிரபலம். இந்த முறை 15ம் தேதி அவனியாபுரம், 16 ம் தேதி பாலமேட்டு, 17ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. காளை வளர்ப்போரும் காளையர்களும் முழு வீச்சில் தயாராகி வருகின்றனர். இதற்கிடையே பாலமேடு மஞ்சமலையாறு மைதானத்தில் உள்ள வாடிவாசலில் வர்ண்ணம் தீட்டி புதுப்பிக்கும் பணிகள் நடக்கிறது. பாலமேடு களத்தில் காளைகளை அடக்கும் வீரர்களுக்கும் கெத்து காட்டி வெல்லும் காளைகளுக்கும் என்னென்ன பரிசுகள் வழங்கப்படும் என்பது குறித்து கமிட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு முதல் பரிசாக கார், 2வது பரிசாக பைக் வழங்கப்படும்; சிறந்த காளைக்கு முதல் பரிசு பைக், 2வது பரிசாக கன்றுடன் நாட்டு பசு பரிசாக வழங்கப்படும்; இது தவிர டிவி, பிரிட்ஜ் வாசிங் மெஷின், தங்க காசு, சைக்கிள் உள்ளிட்ட பல பரிசுகளும் வழங்கப்படும் என்று கமிட்டி அறிவித்துள்ளது.

ஜன 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி