உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / கடம் கருவியில் இசை ஓசை எழுப்பி தரமான கடம் தேர்வு

கடம் கருவியில் இசை ஓசை எழுப்பி தரமான கடம் தேர்வு

கடம் கருவியில் இசை ஓசை எழுப்பி தரமான கடம் தேர்வு | Manamadurai Ghatam Musical Instrument | Interest among Carnatic music experts | Sivaganga மதுரை கடம்பவனம் என புராண காலத்தில் அழைக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தை உள்ளடக்கியதாக திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை இருந்தது. நிர்வாகக் காரணங்களால் இவை தனித்தனி மாவட்டங்களாக பிரிந்தது. எனினும் இம்மாவட்டங்கள் கடம்பவனம் என்றே வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் போற்றப்பட்டு வருகிறது. இங்குள்ள ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் ஒரு சிறப்பு இருப்பது போல் சிவகங்கை மாவட்டம் மானாமதுரைக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. இங்கு தயாரிக்கப்படும் மண் சிலைகள், இசைக் கருவியான கடம் உலகப்புகழ் பெற்றது. தத்ரூபமாகவும், நேர்த்தியாகவும் தயாரிக்கப்படும் மண் சிலைகள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. உலகப்புகழ் பெற்ற மானாமதுரை கடம் வாங்க கர்நாடகா பெங்களூருவில் இருந்து கர்நாடக சங்கீத வித்வான்கள் குழுவாக வந்தனர். கடம் இல்லாத கர்நாடக இசை கச்சேரிகள் நடப்பதில்லை. எனவே பல்வேறு மாநிலங்களில் இருந்து கர்நாடக சங்கீத வித்வான்கள் கடம் வாங்க கடம்பவனம் வருகின்றனர். இசை மேதைகள் இளையராஜா, ஏஆர் ரகுமான், பிரபல கடம் வித்வான்கள் கடம் விநாயக் ராம், சுனந்தா உள்ளிட்டோர் மானாமதுரை வந்து கடம் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பெங்களூரூவைச் சேர்ந்தவர் கடம் வித்வான் கிரிதர் உடுப்பா தனது மாணவர்கள் அரவிந்த், சுனில், பாலு ஆகியோருடன் கடம் வாங்க மானாமதுரை வந்தார். இக்குழுவினர் பெங்களூருவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் கடம் கற்றுக் கொடுக்கின்றனர். இதற்காக ஏராளமான கடம் தேவைப்படுவதால் மொத்தமாக வாங்க வந்திருந்தனர். கடம் மீது இசை ஓசை எழுப்பி, தட்டிப்பார்த்து நேர்த்தியாக ஒலி எழுப்பும் 50 கடம் இசைக் கருவிகளை வாங்கி சரக்கு வேனில் பெங்களூரு அனுப்பினர். இதுகுறித்து அரவிந்த் கூறுகையில். மற்ற வாத்தியங்களை காட்டிலும் கடம் நம்முடன் நெருக்கமாக இருப்பதை வாசிக்கும் போது உணர முடியும். கடம் இசை நம்முடனே பயணம் செய்வது போலவே இருக்கும். அதிலும் மானாமதுரை கடம் எழுப்பும் ஓசை அலாதியானது. எங்களுக்கு மிகவும் பிடித்தமானது, என்றார்.

ஜூன் 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ