/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ மோசமான வானிலை எச்சரிக்கை | Madurai | emergency landing flight | Bad weather
மோசமான வானிலை எச்சரிக்கை | Madurai | emergency landing flight | Bad weather
சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு இண்டிகோ விமானம் 77 பயணிகளுடன் தூத்துக்குடி விமான நிலையம் நோக்கி சென்றது. மோசமான வானிலை மற்றும் அதிக மேகமூட்டம் காரணமாக விமானத்தை இயக்குவது சிரமம் என கருதிய பைலட்டுகள் மதுரை விமான நிலையத்தில் தரையிறக்கினர். விமானத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு உள்ளிட்டோர் பயணம் செய்தனர். பயணிகள் அனைவரும் பத்திரமாக மதுரை விமான நிலையத்தில் இறங்கினர். அதைத் தொடர்ந்து அமைச்சர் கார் மூலம் துாத்துக்குடி புறப்பட்டு சென்றார்.
நவ 21, 2024