முல்லை பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் சங்கம் ஏற்பாடு | Tungsten Mining | Farmers motorcade Protes
முல்லை பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் சங்கம் ஏற்பாடு | Tungsten Mining | Farmers motorcade Protest | Melur | Madurai மதுரை மாவட்டம் மேலூர் அருகே நாயக்கன்பட்டி, அரிட்டாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஐந்தாயிரம் ஏக்கரில் ஹிந்துஸ்தான் ஜிங்க் கனிம சுரங்கம் அமைக்க ஏலம் எடுத்துள்ளது. ஏலத்தை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரி 48 கிராம மக்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பல்வேறு போராட்டங்களில் குடும்பத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று முல்லை பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ரவி, குறிஞ்சி குமரன், இளங்கோ, அசோக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நரசிங்கம்பட்டியில் இருந்து வாகன பேரணியாக புறப்பட்டனர். இந்த வாகன பேரணி மதுரை தல்லாகுளம் தலைமை தபால் அலுவலகம் முன்பு நிறைவு பெறுகிறது. அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதையொட்டி மேலுாரில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. பேரணியில் நகை மற்றும் அடகு கடை முன்னேற்ற நலச் சங்க நிர்வாகிகள் செல்வராஜ், சுரேஷ், முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.