உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மதுரை மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் மறியல்

மதுரை மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் மறியல்

மதுரை மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் மறியல் | Sewage surrounds houses | Public protest | Suyarajyapuram | Sellur | Madurai மதுரை மாநகராட்சி செல்லூர் பகுதியில் பந்தல்குடி கால்வாய் கட்டுமானப் பணி நடக்கிறது. இதற்காக பள்ளம் தோண்டியபோது பாதாளச் சாக்கடை கழிவு நீர் அமைப்புகள் சேதமடைந்தன. இதனால் கழிவுநீர் வெளியே செல்ல முடியாமல் குடியிருப்பு பகுதிகளை சுற்றிலும் கழிவு நீர் தேங்கி கடும் துர்நாற்றம், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி 27 ஆவது வார்டுக்கு உட்பட்ட சுயராஜ்யபுரம் 6 வது தெருவில், தெரு முழுவதிலும் கழிவுநீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பரிதவித்து வருகின்றனர். கடந்த 50 நாட்களுக்கு மேலாக இந்த அவலம் நீடிக்கிறது. கழிவுநீர் வீடுகளை சூழ்ந்து வருவதால் குழந்தைகள் உட்பட பலருக்கு மஞ்சள் காமாலை, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. இதைக் கண்டித்து பந்தல்குடி கால்வாய் - கோரிப்பாளையம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மாநகராட்சிக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். மறியலை தடுக்க போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. Breath: Byte: மூக்கம்மாள் பாதிக்கப்பட்டவர், சுயராஜ்யபுரம், மதுரை 04:20 - 04:39 மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தேங்கிய கழிவு நீரை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததால் மறியல் தற்காலிக முடிவுக்கு வந்தது. மறியலால் பந்தல்குடி கால்வாய் - கோரிப்பாளையம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஜூலை 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை