அரசு பஸ் கண்டக்டர் அட்டகாசம் | Free bus fare quote | tnstc | dindigul
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் டு சிவகங்கை சிங்கம்புணரிக்கு அரசு இலவச மகளிர் பஸ் சென்றது. பெண் பயணிகளிடம் கண்டக்டர் டிக்கெட் கட்டணம் கேட்டார். பாண்டாங்குடியில் ஏறிய பெண்களிடம் கண்டக்டர் டிக்கேட் கட்டணம் கேட்கவில்லை. சில பெண்களிடம் மட்டும் டிக்கெட் வாங்கும்படி கண்டக்டர் கறார் காட்டினார். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. டிக்கெட் வாங்கும்படி அரசு உத்தரவிட்டதாக கண்டக்டர் சமாளித்தார். ஆத்திரமடைந்த பெண்கள் பஸ்சை சிறைப்பிடிக்க முயன்றனர். சைக்கிள் கேப்பில் டிரைவர் பஸ்சை சிங்கம்புணரி நோக்கி ஓட்டி சென்றார். பிரச்னை வரும் என கருதி உள்ளூர் பெண்களிடம் கட்டணம் பெறாமலும், வெளியூர் பெண்களிடம் கட்டணம் வசூலித்ததாகவும் கண்டக்டர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மீது போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் பயணிகள் வலியுறுத்தினர்.