உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / நேர்த்தியான மொட்டு, நறுமணம் பரப்பும் இதழ்கள், தடிமனான காம்பு மதுரை மல்லியின் தனிச்சிறப்பு

நேர்த்தியான மொட்டு, நறுமணம் பரப்பும் இதழ்கள், தடிமனான காம்பு மதுரை மல்லியின் தனிச்சிறப்பு

நேர்த்தியான மொட்டு, நறுமணம் பரப்பும் இதழ்கள், தடிமனான காம்பு மதுரை மல்லியின் தனிச்சிறப்பு / Madurai / There is an allegation that agricultural department officials are not providing guidance to jasmine flower farmers மதுரை வருகின்ற வெளி மாநிலத்தவர்களும் சரி வெளிநாட்டவரும் சரி தவறாமல் வாங்கி செல்லும் ஒரு முக்கிய பொருள் மதுரை மல்லிகை தான். உருண்டு திரண்டு பார்ப்பதற்கு மிக அழகாக காட்சியளிக்கும் இந்த குண்டு மல்லிகை, மதுரை தவிர வேறு எங்கும் விளையாது என்பதுதான் மிகப்பெரும் அதிசயம். நேர்த்தியான மொட்டு, விரிந்து நறுமணம் பரப்பும் இதழ்கள், அதன் தடிமனான காம்பு இவையெல்லாம் மதுரை மல்லிகையின் தனிச்சிறப்பு மதுரை மாவட்டத்தில் செல்லம்பட்டி, கள்ளிக்குடி, சேடப்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி பகுதிகளில் மதுரை மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. மதுரை மல்லிகையின் தனி சிறப்பு காரணமாக மத்திய அரசின் புவிசார் குறியீடு கடந்த 2012 ம் ஆண்டு கிடைத்தது. மதுரை மண்ணில் விளையும் மல்லிகைப்பூ 2 நாட்கள் வரை கூட வாடுவதில்லை. மல்லிகையும் அதை தாங்கும் காம்பும் சம உயரத்தில் இருப்பதுதான் இந்த மல்லிகையின் மற்றொரு சிறப்பு. பைட்: சிவசக்திவேல் மல்லிகை விவசாயி ஒ.ஆலங்குளம் 00:07 - 01:38 01:43 -01:50 01:59 -02:23 மல்லிகை விளைகின்ற மண் மற்றும் உரம் பூச்சி மருந்துகள் குறித்து போதுமான தகவல்கள் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. உரக்கடைகளில் அனுபவ அடிப்படையில் அவர்கள் கொடுப்பதை வாங்கி விளைச்சல் செய்து வருவதாக மல்லிகை விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். பைட்: சுப்பையா மல்லிகை விவசாயி 03:04 -05:23 மல்லிகை விவசாயத்தைப் பொறுத்தவரை அதற்கான விலை என்பது ஆண்டு முழுவதும் ஒரே சீராக இருப்பதில்லை. விழா காலங்களில் அதிகமாகவும் மற்ற நேரங்களில் 100, 50, 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மல்லிகை உற்பத்தியில் பெரும் தொகை மருந்து உற்பத்தியாளர்களுக்கே செல்வதாக தெரிவிக்கின்றனர். பைட்: அன்னவயல் காளிமுத்து மல்லிகை விவசாயி தங்களாச்சேரி 05:51 -06:49 07:16 -07:56 08:12 -08:46 மதுரை மாவட்ட தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறுகையில், ராமநாதபுரம் குண்டுமல்லி (Jasmine sambac), பிச்சி (Jasmine grandiflorum), முல்லை (Jasmine auriculatum) என மல்லிகையில் 3 வகை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விமான நிலைய வசதி இருக்கின்ற காரணத்தால் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் மூலமாக மல்லிகைக்கான சாகுபடி பரப்பை ஒவ்வொரு ஆண்டும் 100லிருந்து 125 ஹெக்டேராக அதிகரித்து வருகிறோம். விவசாயிக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. குளிர் பதன பெட்டிகளும் மானிய விலையில் வழங்கப்படுகிறது. சிறந்த முறையில் ஏற்றுமதி செய்வதற்குரிய பயிற்சிகளும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. விவசாயிகளின் கோரிக்கையான குளிர் பதனக் கிடங்குகள் அமைப்பதற்கு தமிழக அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். எது எப்படியோ உற்பத்தி இடத்திற்கு அருகிலேயே மல்லிகை சந்தை, நறுமண ஆலை, குளிர் பதனக்கிடங்குகள் ஆகியவை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

அக் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை