முதல் கோல் அடித்து விறுவிறுப்பான ஆட்டத்தை துவக்கிய ஜெர்மன் வீரர்கள்
முதல் கோல் அடித்து விறுவிறுப்பான ஆட்டத்தை துவக்கிய ஜெர்மன் வீரர்கள் | Madurai | Junior World Cup hockey tournament | Central Minister welcomes the players with a handshake மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று காலை 9 மணிக்கு ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி கோலாகலமாக துவங்கியது. ஹாக்கி இந்தியா பொதுச் செயலாளர் போலோ நாத் சிங் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மூர்த்தி ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா வீரர்களை கைகுலுக்கி வரவேற்றார். முதல் நாள் ஆட்டமாக ஜெர்மனி மற்றும் தென்னாப்பிரிக்க வீரர்கள் மோதினர். முதல் சுற்று லீக் போட்டியில் ஜெர்மனி 4 -0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆடவர் ஜூனியர் உலக ஹாக்கி லீக் சுற்று 2வது போட்டி காலை 11:15 மணிக்கு துவங்கியது. இதில் கனடா, அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. வெங்கடேசன் எம்.பி, மாநகராட்சி கமிஷனர் சித்ரா போட்டியை துவக்கி வைத்தனர்