/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ அம்மிகளில் மஞ்சள் அரைத்து அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் | Karaikudi muthumariman koil function
அம்மிகளில் மஞ்சள் அரைத்து அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் | Karaikudi muthumariman koil function
காரைக்குடி மீனாட்சிபுரத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. ஆடி மாதத்தை ஒட்டி இக்கோயிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். ஆடி முதல் வெள்ளி முன்னிட்டு அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் நடந்தது. 200க்கும் மேற்பட்ட பெண்கள் சுழற்சி முறையில் 51 அம்மி கல்லில் 301 கிலோ மஞ்சளை அரைத்தனர். இந்த மஞ்சளால் அம்மனுக்கு இன்று அபிஷேகம் நடந்தது. காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பெண்கள் அம்மனை நினைத்து குலவை இட்டு சக்தி கோஷத்துடன் தரிசனம் செய்தனர்.
ஜூலை 19, 2024