திரளான பக்தர்கள் பங்கேற்பு|Madurai | Anjaneyar Temple
மதுரை காமராஜர் சாலையில் உள்ள சீதா சமேத கோதண்ட ராமசுவாமி தேவஸ்தானத்திற்கு சொந்தமான வால்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி திருக்கல்யாண மகோத்சவ உற்சவம் கடந்த 17 ம் தேதி தொடங்கியது. காலை சீதா ராமருக்கு கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிகளுக்கு மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. ராமர் சீதாவுக்கு திருக்கல்யாண நிகழ்வுகளை செளராஷ்டிரா சபையினர் செய்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏப் 21, 2024