உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / கோர்ட் கண்ணாடி ஜன்னலை உடைத்து அடாவடி

கோர்ட் கண்ணாடி ஜன்னலை உடைத்து அடாவடி

கோர்ட் கண்ணாடி ஜன்னலை உடைத்து அடாவடி / Madurai / Conviction in cannabis case Judge receives death threat மதுரை மகபூப்பாளையத்தை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது சகோதரர் பிரசாந்த் என்ற ஜாக்கி. பாண்டியராஜன் மனைவி சரண்யா மற்றும் ஜாக்கி ஆகியோர் வில்லாபுரம் அருகே முட்புதரில் 25 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக 2024ம் ஆண்டு கீரைத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு மதுரை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்தது. இவ்வழக்கில் குற்றவாளிகள் மூவருக்கும் தலா 12 ஆண்டுகள் சிறை மற்றும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஹரிஹரகுமார் உத்தரவிட்டார். 3 பேரையும் சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது பாண்டியராஜன் மற்றும் ஜாக்கி இருவரும் கோர்ட்டில் ரகளையில் ஈடுபட்டனர். ஜாக்கி கோர்ட் ஜன்னல் கண்ணாடிகளை கைகளால் உடைத்து சேதப்படுத்தினார். அவருக்கு காயம் ஏற்பட்டது. அத்துடன் இருவரும் நீதிபதியை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். என் அண்ணன் கிளாமர் காலியை ஏன் என்கவுண்டரில் சுட்டுக்கொண்றனர். வெளியில் வந்து அனைவரையும் கொலை செய்வோம் என ஜாக்கி மிரட்டல் விடுத்தார். பாண்டியராஜனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவர் மீதும் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

ஏப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி