ஆதார், போட்டோ வைத்து ₹500, ₹200 பிரிவுகளில் முன்பதிவு செய்யலாம்
ஆதார், போட்டோ வைத்து ₹500, ₹200 பிரிவுகளில் முன்பதிவு செய்யலாம் / Meenakshi sokkanadhar Thirukalyana utsav online booking / Madurai மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மே 8ம் தேதி கோயில் வடக்காடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் நடைபெறும். திருக்கல்யாண உற்சவத்தை நேரில் தரிசிக்க ஆன்லைன் கட்டண பாஸ் மற்றும் இலவச தரிசன அனுமதி தொடர்பாக கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. Breath கார்டு (with voice over) 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் என இரண்டு பிரிவுகளில் கட்டண பாஸ் பெற ஆன்லைன் முன்பதிவு இன்று துவங்கியது. வரும் மே 2ம் தேதி இரவு 9 மணி வரை https://maduraimeenakshi.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். முன்பதிவுக்கு ஆதார் கார்டு, போட்டோ ஐ.டி, மொபைல் எண் மற்றும் ஈமெயில் ஐ.டி. கட்டாயம். breath ஒருவர் இரண்டு 500 ரூபாய் அல்லது மூன்று 200 ரூபாய் பாஸ் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஒரே ஐ.டி.யில் 500 மற்றும் 200 ரூபாய் பாஸ் பதிவு செய்ய இயலாது. 12 வயதிற்கு மேற்பட்டோர் கட்டண பாஸ் பெறலாம். அனுமதிக்கப்பட்ட இடத்தை விட கூடுதலான விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டால், கணினி மூலம் குலுக்கல் முறையில் பக்தர்கள் தேர்வு செய்யப்படுவர். உறுதி செய்யப்பட்ட பக்தர்களுக்கு மே மூன்றாம் தேதி மெசேஜ் மற்றும் ஈமெயில் அனுப்பப்படும். அவர்கள் மேற்கு சித்திரை வீதியில் உள்ள பிர்லா விஷ்ரம் விடுதியில் மெசேஜ் அல்லது இமெயிலை காண்பித்து பணத்தை கொடுத்து கட்டண பாஸ் பெற்றுக் கொள்ளலாம். மே நான்காம் தேதி முதல் மே 6ம் தேதி வரை காலை 10 மணி தொடங்கி மாலை 5 மணி வரை கட்டண பாஸ் பெறலாம். குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்கு பின் சென்றால் பாஸ் கிடைக்காது. திருக்கல்யாணத்தன்று அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரை மட்டுமே கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். 500 கட்டண பாஸ் உள்ளவர்கள் வடக்கு கோபுரம் வழியிலும், 200 ரூபாய் கட்டண பாஸ் உள்ளவர்கள் வடக்கு - கிழக்கு சித்திரை வீதி சந்திப்பு அருகே உள்ள பாதை வழியாக வந்து வடக்கு கோபுரம் வழியாகவும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.