உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / தினமலர், ஸ்ரீஜெயபிரபா இணைந்து வழங்கிய மெகா கோலப்போட்டி

தினமலர், ஸ்ரீஜெயபிரபா இணைந்து வழங்கிய மெகா கோலப்போட்டி

தினமலர், ஸ்ரீஜெயபிரபா இணைந்து வழங்கிய மெகா கோலப்போட்டி | Mega Kolam competition | Dinamalar, Sri Jeyaprabha Jewellery | SLCS College | Aruppukkottai Road |TVR Nagar | Madurai மாதங்களில் சிறப்புமிக்க தையில் பெண்களுக்காகவே மெகா கோலப்போட்டியை தினமலர் நடத்தி வருகிறது. அந்த வகையில் தினமலர் மற்றும் ஸ்ரீஜெயப்பிரபா ஜூவல்லர்ஸ் சார்பாக மதுரை அருப்புக்கோட்டை ரோடு, டி.வி.ஆர் நகர் சுப்பலெட்சுமி லெட்சுமிபதி அறிவியல் கல்லூரி வளாகத்தில் இன்று காலை மெகா கோலப்போட்டி கோலாகலமாக துவங்கியது. தினமலர் கோலப்போட்டியில் பங்கேற்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தனர். இதில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பெண்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு கோலமிட்டனர். நிகழ்ச்சியை பவர்டு பை சத்யா இணைந்து வழங்குபவர்கள் மதுரை பாண்டியன் அப்பளம், எஸ்.வி.எஸ் அக்மார்க் கடலை மாவு, ஆனந்தா அண்டு ஆனந்தா, மில்கா வொண்டர் கேக் மற்றும் மனோ புக் சென்டர். பெண்கள் தங்கள் கை வண்ணத்தை அழகழகான கோலங்களில் காட்டி மெய் சிலிர்க்க வைத்தனர். அவற்றில் சிவன், பார்வதி, முருகன், விநாயகர், மீனாட்சியம்மன், பெருமாள், கிருஷ்ணர் உள்ளிட்ட கடவுள் கோலங்கள், தாய்மையை வெளிப்படுத்தும் தத்ரூபமான கோலங்களும் இடம்பெற்று இருந்தன. விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தண்ணீர் சேமிப்பு, காற்று மாசுபாடு, பெண்மை குறித்த கோலங்கள், தமிழ் மொழி ஈடுபாடு, வாக்குரிமை, உழவு காட்சி, சோசியல் மீடியாக்களில் அடிக்ட் ஆகி வரும் இளம் சமுதாயம், பூக்கோலம் என புள்ளிகளிலும் ரங்கோலிகளிலும் கோலமிட்டு தங்களது தனித்துவத்தை வெளிப்படுத்தி அசத்தினர். பல கோலங்கள் இயற்கை காட்சிகளை வர்ணித்து தத்ரூபமாக வரையப்பட்டிருந்தன. தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக தேசியக் கொடி, பாரத மாதா உள்ளிட்ட கோலங்களை வண்ணமயமாக அச்சிட்டு அசத்தினர். மேலும் தண்ணீர் மேல் கோலமிட்டு பார்வையாளர்களை மிலரவைத்தனர். ஜிக் ஜாக் கோலம், டாட்டூ கோலம் என புதுவகை ட்ரெண்டுகள் இடம் பெற்றிருந்தன. ஒரு மணி நேரம் நடைபெற்ற கோலபோட்டியில் கே.ஆர்.எஸ். பள்ளி மற்றும் எஸ்.எல்.சி.எஸ். கல்லூரி ஆசிரியர்கள் தீபலட்சுமி, சந்திரகலா, பி. விஜயலட்சுமி, எஸ். விஜயலட்சுமி, சரஸ்வதி, மீனாட்சி, சிந்துராணி, தசராவதி, முத்துமீனா, பாண்டிசெல்வி, யோகலட்சுமி, லோகாம்பாள், சுபன்யா, பிரபா, வசந்தி, ஸ்ரீதேவி, இந்துஜா, சாருமதி மற்றும் குணசுந்தரி ஆகியோர் நடுவர்களாக இருந்து சிறந்த கோலங்களை தேர்வு செய்தனர். முதல் ஐந்து பரிசுகளாக பிரிட்ஜ், வாஷிங் மெஷின், எல்இடி டிவி, கிரைண்டர், மிக்சி வழங்கப்பட்டது மற்றும் கோலப்போட்டியில் சிறந்த படைப்புக்களை வழங்கிய 50 பேருக்கு ஆனந்தா அண்டு ஆனந்தா பொது மேலாளர் ஜெகதீஷ் குக்கர் பரிசு வழங்கினார். மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. முதல் பரிசு விரகனுார் கயல்விழி பிரிட்ஜ் பெற்றார். இரண்டாம் பரிசு உசிலம்பட்டி அமுதா வாஷிங் மெஷின் வென்றார். மூன்றாம் பரிசு திருச்சி பிரியா எல்இடி டிவி பெற்றார். நான்காம் பரிசு மதுரை தனக்கன்குளம் ஷோபனா கிரைண்டர் வென்றார். ஐந்தாம் பரிசு மதுரை அண்ணாநகர் மதனா மிக்சி பெற்றார். பரிசுகளை ஸ்ரீஜெயபிரபா ஜூவல்லரி மேலாளர் பிரபாகரன் மற்றும் சத்யா பொது மேலாளர் வில்சன் இணைந்து வழங்கினர். நிகழ்ச்சியில் ஸ்ரீஜெயபிரபா ஜூவல்லரி உரிமையாளர் பிரபாகரன், சத்யா பொது மேலாளர் வில்சன், மதுரை பாண்டியன் அப்பளம் நிறுவனர் திருமுருகன், ஆனந்தா அண்டு ஆனந்தா பொது மேலாளர் ஜெகதீஷ், மனோ புக் சென்டர் இயக்குனர் சதீஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். தினமலர் வாசகர்கள் நலன் கருதி தெப்பக்குளம் மற்றும் நடராஜ் தியேட்டர் பகுதியில் இருந்து இன்று காலை 7.35 மணிக்கு போட்டி நடக்கும் சுப்பலெட்சுமி லெட்சுமிபதி கல்லுாரிக்கு இலவச பஸ்கள் இயக்கப்பட்டன. போட்டியில் பங்கேற்பவர்களுக்கு உதவியாக ஒருவர் உடனருக்க அனுமதிக்கப்பட்டார். அனுமதி இலவசம்.

ஜன 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை