பால் தரம் அறிய புது வசதி | 'WhatsApp' Message | New facility for milk producers to check quality | A
பால் தரம் அறிய புது வசதி | WhatsApp Message | New facility for milk producers to check quality | Aavin | Madurai மதுரை மாவட்ட ஆவின் நிறுவனத்தின் கீழ், கிராம அளவில் 629 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் இயங்குகிறது. இதன் மூலம் தினமும் 1 லட்சத்து 41 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, மாவட்டம் முழுதுவம் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது மாவட்ட நிர்வாகம், பால்வளத்துறை மற்றும் ஆவின் நிர்வாகம் இணைந்து, தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினருக்கு தினசரி பால் கொள்முதல் விவரங்களை வாட்ஸ் ஆப் மெசேஜ் மூலம் அனுப்பும் நடைமுறை அமல் படுத்தியது. இதன் மூலம் பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலின் அளவு, தரம், கொழுப்புச்சத்து, இதர சத்துக்கள் மற்றும் சங்கக் குறியீட்டு எண் ஆகிய விவரங்கள் தெரிந்து கொள்ளலாம். இத்தொழில்நுட்பத்தை விருதுநகர் தனியார் கல்லூரி ஐ.டி பிரிவு மாணவர்கள் கார்த்திகேயன், கெவினாஷ் வர்மன் ஆகியோர் ஆவின் பொதுமேலாளர் முத்து மாதவனின் ஆலோசனை படி உருவாக்கினர். பால் உற்பத்தியாளர்களின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பும் புதிய சிறப்பு தகவல் சேவையை மதுரையில் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தொடங்கி வைத்தார்.