உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / கடவுள் மறுப்பு ஈ.வெ. ராமசாமி பெரியார் சிலை முன் தீக்குளித்து உயிர் மாய்த்த முருக பக்தர்

கடவுள் மறுப்பு ஈ.வெ. ராமசாமி பெரியார் சிலை முன் தீக்குளித்து உயிர் மாய்த்த முருக பக்தர்

டைட்டில்: கடவுள் மறுப்பு ஈ.வெ. ராமசாமி பெரியார் சிலை முன் தீக்குளித்து உயிர் மாய்த்த முருக பக்தர் | Insistence on Lighting a Lamp on Thiruparankundram Hill | Muruga Devotee Commits Suicide | Madurai மதுரை நரிமேடு மருதுபாண்டியர் தெருவை சேர்ந்தவர் பூர்ண சந்திரன், வயது 40. MBA பட்டாதாரி. மெடிக்கல் ரெப்ரசன்டேட்டிவ். நேரம் கிடைக்கும் போது வேனில் சென்று பழங்கள் விற்பனை செய்து வந்தார். திருமணமான இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். பூர்ண சந்திரன் தீவிர முருக பக்தர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற ஐகோர்ட் உத்தரவிட்டது. எனினும் திமுக அரசு தீபம் ஏற்ற அனுமதி மறுத்தது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த பூர்ண சந்திரன் தனது உயிரை தந்தாவது குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என எண்ணினார். அதற்காக தல்லாகுளம் அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள ஈ.வெ. ராமசாமி பெரியார் சிலை முன் இன்று மதியம் 3.30 மணிக்கு பெட்ரோல் கேனுடன் வந்தார். சிலை அருகே உள்ள போலீஸ் பூத்துக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டு தனது உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டார். கடவுள் மறுப்பு ஈ.வெ. ராமசாமி பெரியார் சிலை முன் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் குறித்து வீடியோ வெளியிட்டார். 2026 ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது கார்த்திகை பெருவிழா அன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என சூளுரைத்து உயிரை திருப்பரங்குன்றம் முருகனின் காலில் சமர்ப்பித்தார். போலீஸ் பூத்திற்குள் உடல் கருகிய நிலையில் சடலமாக கிடந்த பூர்ண சந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதைனைக்காக போலீசார் அரசு ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்றக்கோரி தனது உயிரை முருகனின் பொற்பாதங்களில் காணிக்கையாக செலுத்தியதாக பக்தர்கள் மனம் உருகி கண்ணீர் வடித்தனர்.

டிச 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை