அகில இந்திய செசின்கான் இஸின்ரியு கராத்தே சங்கம் ஏற்பாடு | National Karate Championship | Madurai
அகில இந்திய செசின்கான் இஸின்ரியு கராத்தே சங்கம் ஏற்பாடு / National Karate Championship / Madurai அகில இந்திய செசின்கான் இஸின்ரியு கராத்தே சங்கம் சார்பில் தேசிய அளவிலான ஓப்பன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி மதுரை பசுமலை மன்னர் கல்லுாயில் நடைபெற்றது. அகில இந்திய செசின்கான் இஸின்ரியு கராத்தே சங்கத்தின் தேசிய செயலாளர் ரென்சி செல்வகுமார் தலைமை வகித்தார். போட்டியை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கத் தலைவர் கதிரவன், கராத்தே மாஸ்டர்கள் செல்வகுமார், சக்திவேல் செல்லப்பாண்டியன் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். இப்போட்டியில் தமிழ்நாடு, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அகில இந்திய தலைமைப் பயிற்சியாளர் கோஷி சக்திவேல், தஞ்சாவூர் செல்லப் பாண்டியன், நடிகர் கராத்தே ராஜா உள்ளிட்டோர் நடுவர்களாக செயல்பட்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் ஸ்டார் குரு, பாஜக விளையாட்டு பிரிவு மாநில செயலாளர் தமிழ்ச்சங்கு உள்ளிட்டோர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.