உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / பெண் மாற்றுத்திறனாளிக்கு என்னாச்சு | Former TN BJP Leader Annamalai | Physically challenge women

பெண் மாற்றுத்திறனாளிக்கு என்னாச்சு | Former TN BJP Leader Annamalai | Physically challenge women

பெண் மாற்றுத்திறனாளிக்கு என்னாச்சு | Former TN BJP Leader Annamalai | Physically challenge womens grievances |Madurai மதுரை மண்டேலா நகர் பகுதியில் நேற்று தேசிய ஜனநாயக கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி, பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர். பொதுக்கூட்டம் கூட்டம் முடிந்து அண்ணாமலை தனது கார் இருக்கும் இடத்திற்கு வந்தார். அப்போது பெண் மாற்றுத்திறனாளி ஒருவர் திடீரென அண்ணாமலை காலில் விழுந்து கதறினார். பதறிப்போன அண்ணாமலை, அப்பெண்ணிடம் நடந்த விவரங்களை கேட்டார். தனது நகைகள் அடமானத்தில் இருக்கிறது மீட்க முடியாமல் மூழ்கும் சூழல் இருப்பதாக கண்ணீர் விட்டார். அருகில் இருந்த பாஜ நிர்வாகியை அழைத்த அண்ணாமலை, இவரின் குறைகளை கேட்டு ஒரு மணி நேரத்தில் அழைக்க வேண்டும் என கூறி உதவுவதாக உறுதி அளித்துச் சென்றார்.

மார் 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி