உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மதுரை கே.ஆர்.எஸ். பள்ளி மாணவ, மாணவிகளின் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

மதுரை கே.ஆர்.எஸ். பள்ளி மாணவ, மாணவிகளின் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

மதுரை கே.ஆர்.எஸ். பள்ளி மாணவ, மாணவிகளின் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் / KRS CBSE School students participate in plastic awareness rally / Perungudi / Madurai சர்வதேச பிளாஸ்டிக் பைகள் ஒழிப்பு தினம் ஆண்டு தோறும் ஜூலை 3 ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை குறைப்பதன் முக்கியத்துவம் மற்றும் சுற்றுச்சூழலில் அதன் தீய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை அருப்புக்கோட்டை ரோடு டி.வி.ஆர். நகரில் உள்ள கிருஷ்ணம்மாள் ராம சுப்பையர் சி.பி.எஸ்.இ (CBSE) பள்ளி மாணவ மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலம் பெருங்குடி மந்தையில் துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பெருங்குடி பசும்பொன் முத்துராமலிங்கம் சிலை அருகே நிறைவு பெற்றது. பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த பதாகைகளை கையில் ஏந்தியபடி பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து கோஷம் எழுப்பி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் 10ம் வகுப்பு தவிர 5 முதல் ப்ளஸ் 1 வரை பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனர்.

ஜூலை 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை