மதுரை விவேகானந்த கல்லுாரி கருத்தரங்கில் ராம சீனிவாசன் பங்கேற்பு
மதுரை விவேகானந்த கல்லுாரி கருத்தரங்கில் ராம சீனிவாசன் பங்கேற்பு | Vevekananda college conference | Professor Raama Sreenivasan |Madurai மதுரை மாவட்டம் திருவேடகம் மேற்கு விவேகானந்த கல்லுாரி வணிகவியல் துறை சார்பில் பேராசிரியர்களுக்கான நுண்ணறிவு பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. கல்லுாரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். வணிகவியல் துறை தலைவர் பேராசிரியர் சதீஷ்பாபு வரவேற்றார். கல்லுாரி ஆசிரியர்களுக்கு உணர்ச்சி நுண்ணறிவு முக்கியத்துவம் எனும் தலைப்பில் பேராசிரியரும், பாஜக மாநில பொதுச் செயலாளருமான பேராசிரியர் ராம சீனிவாசன் பேசினார். உதவி பேராசிரியர் பாலமுருகன் பங்கேற்றார். பேராசிரியர் ஜெயசங்கர் நன்றி கூறினார்.
அக் 20, 2024