உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மதுரை மத்திய சட்டசபை தொகுதி அனல் பறக்கும் இறுதிக்கட்டப் பிரச்சாரம்

மதுரை மத்திய சட்டசபை தொகுதி அனல் பறக்கும் இறுதிக்கட்டப் பிரச்சாரம்

மதுரை மத்திய சட்டசபை தொகுதி அனல் பறக்கும் இறுதிக்கட்டப் பிரச்சாரம் | Madurai Central |Tamilnadu Politics | Election2026 |PTR VS Sundar C மதுரை மத்திய சட்டசபை தொகுதியில் மூன்றாவது முறையாக திமுக சார்பில் அமைச்சர் தியாகராஜன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் நடிகர் சுந்தர் சி இரட்டை இலை சின்னத்தில் களம் இறங்கியுள்ளார். தேர்தல் களத்தில் வேட்பாளர் தியாகராஜன் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஈடுபட்டு வந்தார். இறுதி நாளான இன்று காலை 8 மணிக்கு சுந்தராஜபுரம் மார்கெட், வெங்கடாசலபுரம், அக்ரினி உள்ளிட்ட அப்பார்ட்மென்ட் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நட்சத்திர வேட்பாளர்களான அமைச்சர் தியாகராஜன் மற்றும் நடிகர் சுந்தர் சி ஆகியோர் களத்தில் இறங்கி வெற்றிக்கனியை தட்டிப்பறிக்க உள்ளனர். எனினும் கலக்கப்போவது யாரு, நிலைக்குப் போவது யாரு என்ற எதிர்ப்பார்ப்புக்கு மே 4 ம் தேதி விடை கிடைக்கும்.

ஏப் 21, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை