உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / தமிழகம் முழுவதும் ₹பல கோடி மதிப்பில் பொதுப்பணித்துறை மேம்பாட்டு பணிகள் முடக்கம்

தமிழகம் முழுவதும் ₹பல கோடி மதிப்பில் பொதுப்பணித்துறை மேம்பாட்டு பணிகள் முடக்கம்

தமிழகம் முழுவதும் ₹பல கோடி மதிப்பில் பொதுப்பணித்துறை மேம்பாட்டு பணிகள் முடக்கம் / problem renewing license / PWD Contractors are concerned / TN தமிழ்நாடு பொதுப்பணித்துறை கான்ட்ராக்டர்கள் கிளாஸ் 1 முதல் கிளாஸ் 5 ஐந்து பிரிவுகளாக உள்ளனர். தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் கான்டராக்டர்கள் உள்ளனர். பொதுப்பணித்துறையின் மேம்பாட்டு பணிகள் கான்ட்ராக்டர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. கான்ட்ராக்டர்கள் ஆண்டு தோறும் லைசென்ஸ் புதுப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் பணிகளுக்கான டெண்டர் கோர முடியாது. எனவே லைசென்ஸ் புதுப்பிக்க சென்னை பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளரிடம் விண்ணப்பித்து புதுப்பித்து கொள்ளும் நடைமுறை இருந்தது. நீண்ட தொலைவில் இருந்து சென்னை வர இயலாததால் பெரும்பாலானோரின் லைசென்ஸ் புதுப்பிக்க கால தாமதம் ஏற்பட்டது. இதைத் தவிர்க்க அந்தந்த மண்டல தலைமை பொறியாளரிடம் விண்ணப்பித்து புதுப்பித்து கொள்ள கடந்த 2022 ம் ஆண்டு அரசு உத்தரவிட்டது. இந்த புதிய நடைமுறையால் ஆண்டு தோறும் புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. மூன்று ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பித்தால் போதுமானது. இந்தாண்டு முதல் புதிய லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிப்பது மற்றும் பழைய லைசென்ஸ் புதுப்பித்து கொள்வது என அனைத்துமே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்தாண்டு இறுதிக்குள் விண்ணபித்து கான்ட்ராக்டர்கள் பயனடையும்படி பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் மண்டல தலைமை பொறியாளர்களுக்கு சுற்றறிக்கை விட்டுள்ளனர். எனினும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. இ சேவை மையங்களில் பொதுப்பணித்துறை ஆன்லைன் லைசென்ஸ் விண்ணப்பிப்பது மற்றும் புதுப்பிப்பு விவரம் குறித்து ஊழியர்களுக்கு தெரியவில்லை. அதற்கான வழிகாட்டுதல் குறிப்புகள் எதுவும் இ சேவை மையங்களுக்கு பொதுப்பணித்துறை அனுப்பவில்லை. இதனால் லைசென்ஸ் பெறுவது மற்றும் புதுப்பிக்கும் பணி தமிழகம் முழுவதும் ஸ்தபித்துள்ளது. ஆன்லைன் குளறுபடியால் இந்தாண்டு துவக்கத்தில் இருந்தே பல கோடி ரூபாய் மதிப்புள்ள வளர்ச்சி மேம்பாட்டு பணிகளை கான்ட்ராக்டர்களால் மேற்கொள்ள முடியாமல் முடங்கி வருகிறது. பொதுப்பணித்துறை வளர்ச்சி மேம்பாட்டு பணிகளுக்காக டெண்டர் விட்டாலும் அதில் பங்கேற்கு முடியாமல் கான்ட்ராக்டர்கள் பரிதவித்து வருகின்றனர். bytes: அர்ச்சுனன் கான்ட்ராக்டர், மதுரை 04:04 - 04:28 ராம்குமார் கான்ட்ராக்டர், மதுரை 04:36 - 05:15 இந்தாண்டுக்குள் அனைத்து கான்ட்ராக்டர்களுக்கான லைசென்ஸ் புதுப்பிக்க காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஆன்லைன் பதிவில் உள்ள நடைமுறை சிக்கல்களை தீர்க்கப் பொதுப்பணித்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் பொருட்டு ஜான் பென்னிகுக் நினைவு கான்ட்ராக்டர்கள் சங்கத்தினர் அந்தந்த மண்டல தலைமை பொறியாளர் தலைமையில் குழு அமைத்து நேரடியாக மனுக்களை பெற்று லைசென்ஸ் வழங்க மற்றும் லைசென்ஸ் புதுப்பிக்க வேண்டும் என வலியுறுத்தினர். byte: அழகர்சாமி கான்ட்ராக்டர், ஜான் பென்னிகுக் நினைவு கான்ட்ராக்டர்கள் சங்கம், மதுரை 02:04 - 03:39 இக்கோரிக்கையை வலியுறுத்தி மதுரை வரும் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் ஆகியோரை நேரடியாக சந்தித்து முறையிட ஜான் பென்னிகுக் நினைவு கான்ட்ராக்டர்கள் சங்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். அப்போது ஆன்லைன் பதிவில் உள்ள நடைமுறை சிக்கல்களை தீர்த்து பொதுப்பணித்துறை மேம்பாட்டு பணிகளை தடையின்றி மேற்கொள்ள வழிவகை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளனர்.

மார் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை