உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / அழகர்கோவில் ஸ்ரீராம தேவ சித்தர் தரிசனம் செய்ய தடா | SriRama Dheva Sithar Jeeva Samadhi

அழகர்கோவில் ஸ்ரீராம தேவ சித்தர் தரிசனம் செய்ய தடா | SriRama Dheva Sithar Jeeva Samadhi

அழகர்கோவில் ஸ்ரீராம தேவ சித்தர் தரிசனம் செய்ய ‛தடா | SriRama Dheva Sithar Jeeva Samadhi | Devotees Not Allowed | Forest Department | Alagarkoil Hill | Madurai ஸ்ரீராம தேவ சித்தர் பதினெட்டு சித்தர்களில் ஒருவர். மருத்துவத்திற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டவர். ஸ்ரீராம தேவ சித்தர் ஜீவ சமாதி மதுரை அழகர்கோவில் மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் அமைந்துள்ளது. ஸ்ரீராம தேவ சித்தரை சித்த மருத்துவத்தின் ஞானி என சித்தர்களால் போற்றப்பட்டடவர். breath: குறிப்பு: இந்த இடத்தில் ராக்காயி அம்மன் கோயில் செல்லும் விசுவல் பயன்படுத்தவும் அழகர்கோவில் மலை மேல் கடினமான மலையேற்றம் சென்றால் பகவான் ராம தேவ சித்தர் ஜீவ சமாதியை அடையலாம். அழகர்கோவில் ராக்காயி தீர்த்தம் அடுத்துள்ள மலை மேலே அடர்ந்த வனத்தில் 2 கி.மீ பயணித்தால் மலை உச்சியில் பகவான் ராம தேவர் சித்தர் சமாதியை காணலாம். குறுகலான கடினமான மலைப் பாதையில் 2 மணி நேரம் பயணிக்க வேண்டும். மலை உச்சியில் பகவான் ராம தேவ சித்தர் ஜீவ சமாதி கண்ணில் தென்படும். அந்த இயற்கையான சூழல் குளுமையாக இருக்கும். தியானம் செய்ய உகந்த இடம். மலையேற்றம் உடலுக்கும் உள்ளத்திற்கும் உற்சாகத்தை தரும். எனினும் ராம தேவ சித்தர் பீடம் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. breath: குறிப்பு: இந்த இடத்தில் வனத்துறை எச்சரிக்கை போர்டு விசுவல் பயன்படுத்தவும் breath: சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி வனத்திற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவிக்கிறது. தமிழக மலைகளில் உள்ள சித்தர் ஜீவ சமாதிகள், கோயில்களுக்கு செல்ல தடை இல்லை. ஆனால், ராம தேவ சித்தர் மலைக்கு செல்ல தடை விதிப்பது ஏற்புடையதல்ல என பக்தர்கள் குமுறுகின்றனர். இது வழிபாட்டு உரிமையை வனத்துறை பறிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விதிகளுக்கு உட்பட்டு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்துகின்றனர். breath: குறிப்பு: இந்த இடத்தில் அழகர்கோவில் வனச்சரகம் அலுவலகம் ஃபைல் விசுவல் பயன்படுத்தவும் அழகர்கோவில் வனச்சரக அலுவலர்கள் கூறுகையில், ராம தேவ சித்தர் மலைக்கு செல்வோர் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கின்றனர். குரங்கு உள்ளிட்ட வன விலங்குகளுக்கு உணவு வழங்குகின்றனர். இது கூடாது. இதனால் வன விலங்குகளின் உணவு சங்கிலியில் மாற்றம் ஏற்படும். எனினும் பக்தர்கள் நலன் கருதி மாசி பூரம் அன்று ஒரு நாள் மட்டும் விதிகளுக்கு உட்பட்டு பக்தர்கள் ராம தேவ சித்தர் மலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அதற்காக முன் கூட்டியே அழகர்கோவில் வனச்சரகத்தில் முறையான அனுமதி பெற வேண்டும். முன் அனுமதி பெறாதவர் மலையேற முடியாது. மீறுவோர் மீது வனச்சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். breath: மாசி பூரம் மட்டுமல்லாமல் அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களிலும் ராம தேவ சித்தர் கோயில் செல்ல வனத்துறையினர் அனுமதிக்க வேண்டும். breath: குறிப்பு: இந்த இடத்தில் மதுரை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் ஃபைல் விசுவல் பயன்படுத்தவும் மதுரை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல 24 மணி நேர அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 2019 ம் ஆண்டு ஏற்பட்ட காட்டாறு வெள்ளத்தில் 9 பக்தர்கள் அடித்து செல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து பவுர்ணமி, அமாவாசைக்கு மட்டும் பக்தர்கள் சதுரகிரி செல்ல வனத்துறை அனுமதி வழங்கியது. breath: குறிப்பு: இந்த இடத்தில் ஐகோர்ட் மதுரை கிளை ஃபைல் விசுவல் பயன்படுத்தவும் அனைத்து நாட்களிலும் சதுரகிரி செல்ல அனுமதிக்க வனத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என பக்தர்கள் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தனர். விசாரணை நடத்திய ஐகோர்ட் விதிகளுக்கு உட்பட்டு அனைத்து நாட்களும் சதுரகிரி செல்ல வனத்துறை அனுமதிக்க உத்தரவிட்டது. தொடர்ந்து பக்தர்கள் தினமும் காலை 6 முதல் அனுமதிக்கப்படுகின்றனர். மாலை அனுமதி இல்லை. சதுரகிரி மலையில் இரவு தங்கவும் அனுமதி இல்லை. இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதித்து ராம தேவ சித்தர் மலைக்கு தினமும் பக்தர்கள் வனத்துறை அனுமதிக்க வேண்டும். தாமதித்தால் மதுரை ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடுக்கவும் பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் தயாராக உள்ளனர்.

ஜன 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ