1,200 கிலோ கெட்டுப்போன ஆட்டுக்கறி அழிப்பு | Madurai | Stale meat at shop | 1,200 kg of meat seize
1,200 கிலோ கெட்டுப்போன ஆட்டுக்கறி அழிப்பு | Madurai | Stale meat at shop | 1,200 kg of meat seized மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் மோயிசன் வயது 57 என்பவர், மோயிசன் மட்டன் ஸ்டால் நடத்தி வந்தார். இவரது மட்டன் ஸ்டாலில் இருந்து பிரபல ஹோட்டல்களுக்கு தினமும் ஆட்டுக்கறி மற்றும் கோழிக்கறி மொத்தமாக சப்ளை செய்யப்படுகிறது. மோயிசன் தனது மட்டன் ஸ்டாலில் இருந்து கெட்டுப்போன ஆடு மற்றும் கோழிக்கறியை ரசாயனம் தெளித்து விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் வந்தது. உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சிவராம பாண்டியன் தலைமையில் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது ஊசி மூலம் தண்ணீர் நிரப்பி எடையை அதிகரித்து, கெட்டுப்போன ஆட்டுக்கறி மற்றும் கோழிக்கறியை விற்றது உறுதியானது. அங்கு கைப்பற்றப்பட்ட 1,200 கிலோ ஆட்டுக்கறியை பினாயில் ஊற்றி அழித்தனர். கடைக்கு சீல் வைக்கப்பட்டது. மோயிசனுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் 13,000 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.